ஞாயிறு, 27 செப்டம்பர், 2009

சுழல்.

ஆசை வளர்த்து
ஆசை அழித்து,

கனவில் உயிர்த்து
நினைவில் கொன்று,

இரவில் விழித்து
பகலில் சோர்ந்து,

வேளை மறந்து
வேலை செய்து,

உன்னை மறக்க
உன்னை நினைத்து

பார்க்க மறுத்து
மறுத்துப் பார்த்து,

பார்த்துப் பேசி
பேசியதை நினைத்து,

ஆசை வளர்த்து,
ஆசை அழித்து...

12 கருத்துகள்:

  1. நல்லாயிருக்கு நண்பரே...ஜாயின்(follow) லிங்க் கொடுங்கள்

    பதிலளிநீக்கு
  2. //பார்த்துப் பேசி
    பேசியதை நினைத்து,//

    ரொம்பப் படுத்திட்டாங்களோ ?
    நல்லாயிருக்கு கவிதை.
    காதலற்றுவாழ்தல் கொடிது.

    பதிலளிநீக்கு
  3. //உன்னை மறக்க
    உன்னை நினைத்து//

    முரண்தொடையா

    ஃபாலோவர் விட்ஜெட் எங்க?

    பதிலளிநீக்கு
  4. //கனவில் உயிர்த்து
    நினைவில் கொன்று//

    //உன்னை மறக்க
    உன்னை நினைத்து//

    நல்லா இருக்கு வேல்ஜி
    பிடித்த சுழலுடன்.

    பதிலளிநீக்கு
  5. இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இருந்தால் பிரமாதமாக வந்திருக்குமே சுழல்!

    பதிலளிநீக்கு
  6. சுழன்று சுழன்று அடித்திருக்கிறீர்கள்.

    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. //கனவில் உயிர்த்து
    நினைவில் கொன்று,//
    எனக்குப் பிடித்த வரிகள்........அருமை...

    பதிலளிநீக்கு
  8. சும்மா சுத்தி சுத்தி அடிக்கிறதுங்கறது இதானா?

    பதிலளிநீக்கு
  9. // இரவில் விழித்து
    பகலில் சோர்ந்து //
    nice lines.

    பதிலளிநீக்கு