வியாழன், 15 அக்டோபர், 2009

காதல்.


சிலர் சைவம்.
சிலர் அசைவம்.

சிலருக்கு வான்.
சிலருக்கு மண்.

சிலருக்கு நெருஞ்சி.
சிலருக்கு காக்காமுள்.

நிறைய ஆய்ந்தும்
நிறைவுறாத ஆய்வு.

விபத்து.
இருப்பினும்
பெட்டிச்செய்தி அல்ல!

காலம் காலமாய்
நடக்கும் கண்கட்டு வித்தை.

உணர்ந்தவரெல்லாம் சொன்னபின்பும்
பொழிப்புரை தேவைப்படும் இலக்கியம்!

அது, அதுவானால்
அதுவே சொல்லும்
ஆன்மீகம்!

பின் குறிப்பு:இந்த பக்கத்தில் followers widget இணைக்க இயலவில்லை.jeyaperikai.blogspot.com என்ற பக்கத்தில் எனது பதிவுகளை தொடர்கிறேன்.தொடர்ந்து உங்கள் கருத்துகளை தெரிவிக்க வேண்டுகிறேன். 'சுழல்' கவிதைக்கு பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி!

ஞாயிறு, 27 செப்டம்பர், 2009

சுழல்.

ஆசை வளர்த்து
ஆசை அழித்து,

கனவில் உயிர்த்து
நினைவில் கொன்று,

இரவில் விழித்து
பகலில் சோர்ந்து,

வேளை மறந்து
வேலை செய்து,

உன்னை மறக்க
உன்னை நினைத்து

பார்க்க மறுத்து
மறுத்துப் பார்த்து,

பார்த்துப் பேசி
பேசியதை நினைத்து,

ஆசை வளர்த்து,
ஆசை அழித்து...

வியாழன், 24 செப்டம்பர், 2009

செயற்கை இதயம்! இந்திய தயாரிப்பில் மிக குறைந்த விலையில் கிடைக்க இருக்கிறது...


மனித இதயம் நான்கு அறைகளைக் கொண்டது.கரப்பான் பூச்சியின் இதயமோ 13 அறைகளைக் கோண்டது.இந்த அமைப்பினால் புவியில் அதிககாலம் தொடர்ந்து கொண்டிருக்கும் உயிரினமாக இருக்கிறது.இதை அடிப்படையாகக் கொண்டு ஐந்து அறைகள் கொண்ட செயற்கை மனித இதயத்தை, கரக்பூர் ஐ.ஐ.டி புரபஸர் சுஜாய் குஹா உருவாக்கியிருக்கிறார்

சோதனைகள் முடிந்து வெற்றி பெறும் தருவாயில் இருக்கும் முயற்சி கைகூடினால் மிகக் குறைந்த விலையிலும் இருக்கும்.அமெரிக்காவில் முப்பது லட்சங்களுக்கு கிடைகும் செயற்கை இதயமானது ஒரு லட்ச ரூபாய்க்கு கிடைக்கும்.

இன்றய நிலையில் ,உலக அள்வில் சுமார் இரண்டு கோடி பேர் செயற்கை இதயத்திற்கான தேவையுடன் உள்ளனர்.சுமார் முப்பது சதவீதத்தினரே தங்கள் தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடியும்.

சுஜாய் குஹாவினால் எண்ணற்றோர் பயனடைய வாய்ப்பு உள்ளது.

சமீப காலமாக இந்திய மருத்துவ சேவை சிறந்து வருகிறது. உலகத் தரம் வாய்ந்த அறுவை சிகிச்சைககள் இங்கு நடை பெறுகின்றன.சென்னை முக்கிய இடத்தை வ்கிப்பது குறிப்பிடப்படவேண்டியது.

எளிய மக்களுக்கும் எல்லாம் கிடைத்தால் நன்றாயிருக்கும்.தமிழக அரசின் இலவச மருத்துவ காப்பீடு திட்டம் நல்வரவாய் தெரிகிறது.வழக்கமான முறைகேடுகள் இன்றி மக்கள் பயனடைந்தால் பாராட்டலாம்.

மு.க.அழகிரி பார்லிமெண்டில் பேசுவாரா?..ஜெ கேள்வி:

மு.க.அழகிரி பார்லிமெண்டில் பேசுவாரா?..ஜெ கேள்வி:

தமிழில் பேச வழியில்லாததால் மு.க.அழகிரி தமிழில் பேசவில்லை.தொன்மையான மொழியான தமிழில் பேச கருனா நிதி ஏன் போரடவில்லை ..,அவர் பேசாமல் இருப்பதே நல்லது என நினைத்துவிட்டாரோ என்று கேட்டிருக்கிறார் ஜெ.

________________________________________________________

முலாயம் சிங் ,கல்யான் சிங்,பால் தாக்கரே,ஜெயில் சிங்,ராஜ் நாத் சிங்,மன்மோகன் சிங்,ஜெயலலிதா எல்லோரும் உத்தரபிரதேச கிராமமொன்றில் ஒரு குடிசையில் வசிக்கின்றார்கள்.அவர்களின் தாய் சாப்பிட்டு மூன்று நாட்களாகிவிடது என்கிறார்.

48 வயதான மித்தாய் லால் பெயர் ராசியினால் தன் பிள்ளைகள் நன்றாய் வருவார்கள் என்ற நம்பிக்கையில் அவர்களின் பெயரை வைத்திருக்கிறார்.

புதன், 23 செப்டம்பர், 2009

பொருளிலார்க்கு...

பசுவும்,பாண்டமும்
மனிதனை அளந்தது
ஆரிய காலம்.

பொன்னும் பொருளும்
அதையே செய்யும்
நவீன காலம்.

இருப்போர்
இரங்குவதிலை.
இல்லாதோர்
நிமிர்வதில்லை.

மனிதம் வாழ்வதாயில்லை.
எக்காலத்திலும்.

எத்தனை கோடி சவங்கள்!

செவ்வாய், 22 செப்டம்பர், 2009

எழுதக்கூடாத கவிதை..


மனதின் ஈரத்தில்
முளைத்து எழுந்தது
அந்தக் கவிதை.

மரபை மீறியதென்று
மாமக்கள் சினந்தனர்.
எச்சரித்தனர்.
வாள் கொண்டு கிழித்தனர்.

காயங்கள் ஆறிய
என் கையிலும் இருக்கிறது
கூரிய வாள்!

மனதின் ஓரத்தில்
அந்தக் கவிதையும்!

இவகர்களின் பார்வையில் வாழ்க்கை!

தலகீழா பொறக்குறான்...தலகீழா நடக்குறான், ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்னுக்கள்ளே...,என்று
எத்தனை பாடல்கள் வாழ்க்கையப் பற்றி.
வாழ்க்கை தத்துவங்களிலோ,பாட்ல்களிலோ இல்லை.அனுபவம்தானே வாழ்க்கை!

ஒரு நான்கு பேர் ,அவர்களின் அனுபத்தை பாடமாக்கினால்..

கசாப்புக்கடைக்காரர்:
கண் பார்க்கனும்,கை செய்யனும்! கத்தி படபடன்னு விழனும்..எப்ப வேணா கைல படலாம்.பயந்தா பொழைக்க முடியுமா?வெட்டி பொட்டலம் போட்டு போய்க்கிட்டே இருக்கனும்!

டீ மாஸ்டர்:
சர்க்கரை கம்மியா இருக்கிற டீக்கு சர்க்கரைய அடையாளமா வைக்குறோம்.அது மாதிரிதான்.பார்க்க ஒன்னா பழக ஒன்னா இருப்ப்ங்க..ஆராய்ச்சி எல்லாம் பண்னாம சூடா டீ சாப்பிட்டமா..,எடத்த காலி பண்னமானு போய்க்கிட்டே இருக்கனும்.

மெக்கானிக்:
ஒவ்வொரு வண்டியும் ஒவ்வொருத்தருக்கு செட்டாகும்! பள்ளம் வந்தா கியர டவுன் பண்னி, நல்ல ரோட்ல வெரட்டி போகவேண்டியதுதான்.மெய்ன்டெனென்ஸ் வேணும் சார்!

பலூன் விற்பவர்
இந்தா சார்.. நீயும் ஊது, நானும் ஊதுறேன்! உன் மூச்சு.என் மூச்சுன்னு என்ன வித்தியாசம் இருக்கு!கட்டு டைட்டா இருக்கிற வரைக்கும் காத்து இருக்கும்,காத்து இருக்கிற வரைக்கும் பிள்ளைகள் விளையாடும். நாமளும் இருக்கிற வரைக்கும் அடுத்தவங்கள சந்தோஷமா வைச்சுட்டு கிளம்ப வேண்டியதுதான்..