செவ்வாய், 22 செப்டம்பர், 2009

இவகர்களின் பார்வையில் வாழ்க்கை!

தலகீழா பொறக்குறான்...தலகீழா நடக்குறான், ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்னுக்கள்ளே...,என்று
எத்தனை பாடல்கள் வாழ்க்கையப் பற்றி.
வாழ்க்கை தத்துவங்களிலோ,பாட்ல்களிலோ இல்லை.அனுபவம்தானே வாழ்க்கை!

ஒரு நான்கு பேர் ,அவர்களின் அனுபத்தை பாடமாக்கினால்..

கசாப்புக்கடைக்காரர்:
கண் பார்க்கனும்,கை செய்யனும்! கத்தி படபடன்னு விழனும்..எப்ப வேணா கைல படலாம்.பயந்தா பொழைக்க முடியுமா?வெட்டி பொட்டலம் போட்டு போய்க்கிட்டே இருக்கனும்!

டீ மாஸ்டர்:
சர்க்கரை கம்மியா இருக்கிற டீக்கு சர்க்கரைய அடையாளமா வைக்குறோம்.அது மாதிரிதான்.பார்க்க ஒன்னா பழக ஒன்னா இருப்ப்ங்க..ஆராய்ச்சி எல்லாம் பண்னாம சூடா டீ சாப்பிட்டமா..,எடத்த காலி பண்னமானு போய்க்கிட்டே இருக்கனும்.

மெக்கானிக்:
ஒவ்வொரு வண்டியும் ஒவ்வொருத்தருக்கு செட்டாகும்! பள்ளம் வந்தா கியர டவுன் பண்னி, நல்ல ரோட்ல வெரட்டி போகவேண்டியதுதான்.மெய்ன்டெனென்ஸ் வேணும் சார்!

பலூன் விற்பவர்
இந்தா சார்.. நீயும் ஊது, நானும் ஊதுறேன்! உன் மூச்சு.என் மூச்சுன்னு என்ன வித்தியாசம் இருக்கு!கட்டு டைட்டா இருக்கிற வரைக்கும் காத்து இருக்கும்,காத்து இருக்கிற வரைக்கும் பிள்ளைகள் விளையாடும். நாமளும் இருக்கிற வரைக்கும் அடுத்தவங்கள சந்தோஷமா வைச்சுட்டு கிளம்ப வேண்டியதுதான்..

1 கருத்து: